அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆண்கள் இரட்டையர் இந்திய ஜோடி வேர்ல்டு டூர் பாட்மின்டன் பைனல்சில்…
பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நேற்று சீனாவின் ஹாங்சு நகரில், . ஆண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் உலகின் 'டாப்-8' ஜோடி, இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன.
இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக்ஷெட்டி ஜோடி, உலகத் தரவரிசையில் 'நம்பர்-3', 'பி' பிரிவில் இடம் பெற்று, முதல் இரு போட்டியில் வெற்றி பெற்றது.
உலகத் தரவ ரிசையில் ‘நம்பர்-2' ஆக உள்ள மலேசியாவின் ஆரோன்சியா, சோ இக் ஜோடியை மூன்றாவது, கடைசி போட்டியில் எதிர் கொண்டது.
அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில், இந்திய ஜோடி முதல் செட்டை (17–21) என இழந்து.,பின் இந்திய ஜோடி அடுத்த இரு செட் டுகளை (21-18, 21-15) வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 17–21, 21-18, 21-15 என வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வென்று, பட்டியலில் முதலிடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
வேர்ல்டு டூர் பாட்மின்டன் பைனல்ஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆண்கள் இரட்டையர் இந்திய ஜோடி பெருமை பெற்றனர்
0
Leave a Reply